சொல் பொருள்
(வி.மு) 1. வழிப்படு, 2. ஊழினையுடையது
சொல் பொருள் விளக்கம்
1. வழிப்படு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be on the way
has a (good) fortune
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ – கலி 147/1-3 “நன்னெறிகளிலுட்படாத சொற்களைச் சொல்லும்படி செய்து, அறச் செயல்களைக் கெடுக்கும் தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ? முன்_நாள் போகிய துறைவன் நெருநை அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அலவன் காட்டி நல் பாற்று இது என நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – அகம் 380/3-8 முன்னாளில் சென்ற தலைவன், நேற்று அகன்ற இலையினையுடைய நாவல்மரம் நீர் உண்ணும் துறையில் சொரிந்த கனியினை அதன் அழகு கெட இழுத்துக்கொண்டு சென்று, தன்னுடைய தாழையின் வேர்ப்பக்கம் உள்ள வளையிலுள்ள அன்பு பொருந்திய பெண்ஞெண்டிற்குத் தரும் ஆண் ஞெண்டினைக் காட்டி, இது நல்ல ஊழினையுடையது என்று கூறி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்