பாலை என்பது ஒரு திணை
1. சொல் பொருள்
(பெ) 1. வறட்சி, 2. நீடித்த வறட்சிப்பகுதி, 3. ஒரு வகை யாழ், 4. ஒரு வகைப் பண், 5. குடசப் பாலை, வெட்பாலை, கருடப்பாலை, ஏழிலைப்பாலை போன்ற ஒரு வகை மரம், அதன் பூ, 6. திணை
2. சொல் பொருள் விளக்கம்
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும். பாலைநிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: கொற்றவை
- மக்கள்: எயினர் (வேட்டுவர்) ,விடலை, காளை, மறவர், மறத்தியர்
- பறவைகள்: பருந்து, கழுகு, புறா
- மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
- மலர்கள்: மராம்பு
- பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
- பறை : ஆறலை, சூறைகோள்
- தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
- உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
- நீர்: கிணறு
- விலங்கு: வலியிலந்த புலி, செந்நாய்
- யாழ்: பாலையாழ்
- ஊர்: குறும்பு
பாலை பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். ஆங்கிலேயர் இதனை “இலங்கை இரும்பு” (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர்.
பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். பாலக்கொடி நீரோட்டமுள்ள ஒரு கொடி.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
aridity, barrenness, arid tract, a kind of lute, a melody type, various species of a flowering tree such as Conessi-bark, rosebay, India-rubber vine, Wrightia tinctoria, Manilkara hexandra, Alstonia scholaris?
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
சொல் இடையிட்ட பாலை நிலையும் - பொருள். புறத்:24/31 வாகை-தானே பாலையது புறனே - பொருள். புறத்:18/1 மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை/வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் - பொரு 22,23 பாலை நின்ற பாலை நெடு வழி - சிறு 11 பாலை நின்ற பாலை நெடு வழி - சிறு 11 நைவளம் பழுநிய நயம் தெரி பாலை/கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க - சிறு 36,37 இன் தீம் பாலை முனையின் குமிழின் - பெரும் 180 பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார் - மது 314 தில்லை பாலை கல் இவர் முல்லை - குறி 77 நைவளம் பழுநிய பாலை வல்லோன் - குறி 146 கொடிறு போல் காய வால் இணர் பாலை/செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் - நற் 107/3,4 பைது அற வெந்த பாலை வெம் காட்டு - ஐங் 317/2 தொடை படு பேரியாழ் பாலை பண்ணி - பதி 46/5 விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி - பதி 57/8 தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் - பதி 65/14 இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி - பதி 66/2 புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும் - பரி 7/77 கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் - பரி 11/127 ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் - பரி 17/17 நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை/அரை வரை மேகலை அணி நீர் சூழி - பரி 21/13,14 வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை/நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் - அகம் 355/4,5 ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் - ஐங் 213/2
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11 பாலைத் தன்மையாகிய வறட்சி நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய ஆறலை கள்வர் படை விட அருளின் மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22 வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின் மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 36,37 நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க, தில்லை பாலை கல் இவர் முல்லை – குறி 77 தில்லைப்பூ, பாலை, கல்லிலே படர்ந்த முல்லைப்பூ, கொடிறு போல் காய வால் இணர் பாலை – நற் 107/3 பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13 நிரைபட ஏழு ஏழாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலை
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி - புகார்:3/71 நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை - புகார்: 7/207,208 பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் - மது:11/66 எழுச்சி பாலை ஆக என்று ஏத்த - வஞ்சி:26/31 பாற்பட நின்ற பாலைப்பண் மேல் - புகார்:3/149 குரல் குரலாக வரு முறை பாலையின் துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் - வஞ்சி: 28/33,34 ஈர்ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் - புகார்: 10/262,263 திரு மணி வீணை குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து - சிந்தா:3 619/3 பாலை மணி யாழ் மழலை பசும்பொன் நிலத்து இழிவாள் - சிந்தா:9 2018/3 ஆன்ற வெம் பாலை அழல் மிதித்து அன்ன அரும் சுரம் சுடர் மறை பொழுதின் - சிந்தா:10 2106/3 பாலை போய் மருதம் பயந்திட்டதே - சிந்தா:10 2170/4 பாலை யாழ் மழலை வேறாய் பல் மணி கொம்பின் நின்றாள் - சிந்தா:13 2835/4 இரும் சிறை வண்டு இனம் பாலை முரல - திணை50:16/2 பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு - திணை150:133/1 செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய் - தேம்பா:14 73/3 பாலை யாழ் இசை பாடினர் வீதியுள் - தேம்பா:17 42/3 பயின்று எழும் புகழின் மிக்கோர் பணி முகத்து உவந்த பாலை - தேம்பா:19 11/4 காமமே பறவை தேர் மேல் கசடு எனும் பாலை சேர்ந்தாள் - தேம்பா:30 79/1 பாலை ஆய் மலர்ந்து எழ பற்றி அண்டினார் - தேம்பா:30 150/4 தேர் ஒரு நன்றி இல்லாமையில் தீவினை தீக்கும் பாலை என வைகும் - தேம்பா:32 46/3 பாலைகள் மா மகிள் பலவு சுள்ளிகள் - தேம்பா:1 37/2 முற்றி வேம் அழல் பாலையில் காய்ந்த எரி முள்ளின் - தேம்பா:32 17/1 முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில் பனி வரும் துணர் பூத்து அன பான்மையே - தேம்பா:33 15/3,4 பாலையின் வெப்பம் பனி மருதத்து ஆக்கினையே - தேம்பா:19 18/1
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி - சீறா:685/1 தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே - சீறா:691/4 பாலை நேர் மறை குருக்களை தினம் பழித்திடுவன் - சீறா:1692/3 பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை - சீறா:2689/4 விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி - சீறா:3384/1 விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் - சீறா:3415/1,2 எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் - சீறா:3561/4 பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் - சீறா:4034/3 அரிய பாலை வனமும் அடவியும் - சீறா:4814/1 அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் - சீறா:4889/4 வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு - சீறா:842/2 இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து - சீறா:33/1 வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் - சீறா:682/4 சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் - சீறா:688/1 பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே - சீறா:689/4 பாலையில் அடைந்து பசியினால் இடைந்து பலபல வருத்தமுற்றதுவும் - சீறா:692/1 எரி சுர பாலையில் செய்தி யாவையும் - சீறா:1022/3 பரல் கிடந்த வெம் பாலையில் பகல் நடு போதில் - சீறா:2636/2 பருகுறா கொடும் பாலையில் பெரும் புனல் படுத்து - சீறா:3445/1 தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து - சீறா:4755/2 குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின் மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை - சீறா:734/1,2 தீதுறும் கொடும் பாலையும் குறிஞ்சியும் சேர்ந்த - சீறா:447/3 தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து - சீறா:693/2 விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் - சீறா:999/4 ஊற்று பாலையும் ஊற்றிக்கொண்டு இங்ஙனம் - சீறா:2335/3 கருங்கல் என்னும் கலசத்தில் பாலையும் தரும் கை வள்ளலிடம் கொடு சார்ந்தனர் - சீறா:2336/3,4 அருந்தும் சோற்றையும் பாலையும் அங்கையில் - சீறா:2337/1 வந்த சோற்றையும் பாலையும் மன்னவர் - சீறா:2340/3 மூரலும் அவை மூழ்கிய பாலையும் வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட - சீறா:2341/2,3 அடவியும் பாலையும் அருவி குன்றமும் - சீறா:3304/1 எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் - சீறா:3315/3,4 நீறு பாலையும் முல்லையும் நீந்தியே - சீறா:4221/3 நீங்கிலாத கான்யாறும் வெம் பாலையும் நீந்தி - சீறா:4267/2 கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை - சீறா:4452/3 உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் - சீறா:4922/3 ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க - சீறா:697/1 பரல் அழல் பாலையை போக்கி பண்ணை சூழ் - சீறா:3292/3 மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி - சீறா:4747/1 பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக - சீறா:4901/1
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை - தேவா-அப்:2878/1 பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே - தேவா-சம்:1172/4 பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ - தேவா-சம்:2434/1 பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே - தேவா-சம்:3572/4 பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் - தேவா-சம்:3583/3 பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை - தேவா-அப்:173/1 அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு - தேவா-அப்:478/2 நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை - தேவா-அப்:711/1,2 பாலை யாழொடு செவ்வழி பண் கொள - தேவா-அப்:1193/1 பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் - தேவா-அப்:1567/1 தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை - தேவா-அப்:2086/2 செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் - தேவா-அப்:2094/2,3 சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை - தேவா-அப்:2109/3 கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே - தேவா-அப்:2352/3,4 திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் - தேவா-அப்:2375/1 பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் - தேவா-அப்:2441/3 அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி - தேவா-அப்:2628/3 தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே - தேவா-அப்:2715/4 தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம் - திருவா:5 58/1 நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை - திருவா:27 4/3 தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து - திருவா:6 21/3 தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய - திருவா:8 14/4 அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும் - திருவா:2/98,99 பாலை கறந்து பருகுவதே ஒக்கும் - திருமந்:505/2 பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற - 1.திருமலை:5 43/2 அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை - 3.இலை:7 3/3,4 மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி - 5.திருநின்ற:1 174/1 பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் - 5.திருநின்ற:1 356/3 கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி - 6.வம்பறா:1 625/1 வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய - 6.வம்பறா:3 16/1 பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி - 7.வார்கொண்ட:4 2/3 பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கி - 12.மன்னிய:5 2/2 பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு - 4.மும்மை:5 15/4 பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற - 1.திருமலை:5 43/2
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா - வில்லி:12 155/4 மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் - வில்லி:22 2/1 உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2 அணிகொண்ட குரங்கினங்கள் அலை கடலுக்கு அ பாலை மணல் ஒன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே - கலிங்:96/1,2 கல் வரையும் பாலை கடும் சுரமும் கான்யாறும் - வில்லி:27 53/1 பயப்புஅறு பாலை நிலனும் ஒருபால் - உஞ்ஞை:49/71 பாலை தழீஇய பயன்அறு பெரு வழி - உஞ்ஞை:52/80 நால் பெரும் பண்ணும் எழு வகை பாலையும் மூஏழ் திறத்தொடு முற்ற காட்டி - உஞ்ஞை:37/115,116 பாலையும் நெய்தலும் வேலி ஆக - மகத:2/39 பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப - நாலாயி:182/3 பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப - நாலாயி:206/1 ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின் - நாலாயி:788/3 பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா - நாலாயி:788/4 பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் - நாலாயி:1574/1 பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் - நாலாயி:1850/2 வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே - நாலாயி:2503/2 கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை - நாலாயி:3222/2 தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை - நாலாயி:3714/1 இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே - திருப்:5/5 பணை முலை மெத்த பொதிந்து பண்புறுகின்ற பாலை - திருப்:137/14 நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு - திருப்:173/9 சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக - திருப்:232/7 அ பாகை பாலை போல் சொல் காவல் பாவை தனத்து அணைவோனே - திருப்:274/7 பாடல் காதல் புரிவோனே பாலை தேன் ஒத்த அருள்வோனே - திருப்:363/3 பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் - திருப்:595/4 மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் - திருப்:882/1 ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே - திருப்:988/2 வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட - திருப்:1231/7 பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் - திருப்:840/5 பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர் - அயோ:13 4/1 பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே - அயோ:14 20/4 படி உடை பரல் உடை பாலை மேல் உயர் - அயோ:14 22/3 பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் - ஆரண்:10 95/3 பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக - பால:15 6/3 வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார் - அயோ:9 47/1 வன் தெறு பாலையை மருதம் ஆம் என - அயோ:14 24/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்