சொல் பொருள்
பாழ் – வெறுமை
பழி – வசை
சொல் பொருள் விளக்கம்
‘என்னபட்டு என்ன செய்வது? ‘எஞ்சியது பாழும் பழியுமே’ என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் ஊறுவர். முயன்று முயன்று தேடியும் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கடன்மேல் கடன் பட்டு கலங்குவாரும், எவ்வளவு தான் தம்மால் முடியுமோ அவ்வளவு உதவியும் அதனை நினையாமல் உண்மை நிலைமை உணராமல் பழிக்கு ஆட்பட்டாரும், தம்மை நொந்து “ நமக்கு மிஞ்சியது பாழும் பழியுமே” என்பது மிகுதியாகின்றதே அன்றி குறையும் நடைமுறை நாட்டில் இல்லை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்