சொல் பொருள்

(பெ) 1. பதுமை, உருவ பொம்மை, 2. பெண்சிலை, 3. பிம்பம், 4. சிறு பெண்

சொல் பொருள் விளக்கம்

1. பதுமை, உருவ பொம்மை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

puppet, doll, statue or image of a lady, reflected image, girl

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 410,411

சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பதுமை
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற

யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 101,102

யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து

கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல – குறு 8/4,5

கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே!

இது என் பாவைக்கு இனிய நன் பாவை – ஐங் 375/1

இது என் பாவை போன்ற மகளுக்குப் பிடித்த பதுமை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.