பிசைந்தெடுத்தல்

சொல் பொருள்

பிசைந்தெடுத்தல் – வலுவாக அடித்தல், அலைக்கழிவு செய்தல்

சொல் பொருள் விளக்கம்

பிசைதல், கையால் கூழாக்கல்,மாவாக்கல் குறிக்கும். “அடி நன்றாகப் பிசைந்து எடுத்து விட்டான்” என்பது பல்கால்வலுவாக அடித்தல், மாவாகக் கூழாகச் செய்தல் போல் அடித்தல் குறிப்பது. பிசைதல் வாட்டி வருத்துதல் பொருளில் வருவதால் அலைக்கழிவும் குறிப்பதாயிற்று. “இல்லை என்றால் விட்டானா? பிசைந்து எடுத்து விட்டான்; கொடுத்துத்தான் ஒழித்தேன்” என்பதில் பிசைதல் பலகாலும் வந்து உதவி கேட்டுப் பெறுதலைக் குறித்தது.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.