Skip to content
பிடவு

பிடவு என்பதுஒரு மரம், அதன் பூ.

1. சொல் பொருள்

(பெ)(பெ) பிடா, பிடவு, குட்டிப்பிடவம், ஒரு மரம், அதன் பூ பார்க்க : பிடவம்

2. சொல் பொருள் விளக்கம்

இதன் பூ வெண்மை நிறமானது.

கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Bedaly emetic-nut, Randia malabarica, Benkara malabarica

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/7

இந்த வெள்ளைப்பூவின் இதழ்களில் சிவந்த வரிகள் காணப்படும்.

அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/1,2

அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல
சிவந்த வரிகளைக் கொண்ட இதழ்களையுடைய நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின்.
பூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும்

குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி (அகநானூறு 154)

பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் - அயோ:9 7/1

பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ - நற் 246/8

களவுடன் கமழ பிடவு தளை அவிழ - நற் 256/6
கூர்நுனி கொண்ட களாக்காய் காய்க்கும்போது பிடவு மலரும்

போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி - ஐங் 412/2

வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய - ஐங் 461/1
வானத்தில் மேக மூட்டத்தில் நனைந்து பூக்கும்

வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் - அகம் 139/11
மணல் வெளியிலும் பூக்கும்.

ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த - அகம் 147/1
மலைக்காட்டில் பூக்கும்

வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் - அகம் 184/7
வெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும்

சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ - அகம் 304/11

செம் வரி இதழ சேண் நாறு பிடவின்/நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் - நற் 25/2,3

பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.  - பதி 66/17

பறவைகள் பிடவப் பூக்குலைக்குள் பதுங்கும்.

சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல் - அகம் 34/1
செடி கருமையாகவும் இருக்கும். பூ வெண்மையாக இருக்கும்.

குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி - அகம் 154/4
காம்பு நீளமாக இருக்கும்

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி - அகம் 183/11
மொட்டுகள் கூர்மையாக இருக்கும்.

தொகு முகை விரிந்த முட கால் பிடவின்/வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் - அகம் 344/3,4
செடி முடம்பட்ட கால், கை போல இருக்கும்.

தடவு நிலை கொன்றையொடு பிடவு தலை பிணங்கிய - உஞ்ஞை:49/116

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *