சொல் பொருள்
(பெ) 1. முருகனின் யானை, 2. முருகனின் வாகனமாகிய மயில்,
சொல் பொருள் விளக்கம்
1. முருகனின் யானை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the elephant of Lord Murugan
the peacock, Murugan’s bird for riding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/1,2 பரந்த பெரிய குளிர்ந்த கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து, மிகவும் உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து, மணி மயில் உயரிய மாறா வென்றி பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/7,8 நீலமணி போலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியினையுடைய அம் மயிலாகிய ஊர்தியினையுடைய ஒள்ளிய செய்யோனும் என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்