Skip to content

1. சொல் பொருள்

(வி) 1. ஒன்றோடொன்று நெருக்கமாகச் சேர்ந்திரு, 2. இணைந்திரு, 3. செறிந்திரு, 4. கட்டு, 5. தழுவு,

2. (பெ) 1. பிடிப்பு, 2. விருப்பம், 3. பாய்மரக்கப்பலில் பாயைச் சேர்த்துக்கட்டும் மரங்கள், 4. பெண்மான், 5. காப்பு, உத்தரவாதம், ஈடு,

2. சொல் பொருள் விளக்கம்

1. ஒன்றோடொன்று நெருக்கமாகச் சேர்ந்திரு,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

intertwine, entwine, join, be close together, fasten, tie, hold by both arms, holding, love, desire, poles tied with the sails in a ship, female deer, pledge, guarantee, security

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் – கலி 106/32,33

அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர்

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5

உயர்ந்து எதிர் எதிராக நீலமலர்கள் இணைந்திருப்பது போன்ற கண்களையுடையவளே!

பிணை யூபம் எழுந்து ஆட – மது 27

ஒன்றனோடு ஒன்று நெருங்க குறைத்தலைப்பிணங்கள் எழுந்து ஆட,

மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9

மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,

அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/25,26

அவர்களுள், ஊறிடும் மிகுந்த காதலுணர்வு பெருக, பூக்கள் நிறைந்த நீலமணியைப் போன்ற நெடிய தோள்களால்
தழுவி வளைத்து
காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான்,

பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57

இரக்கங்கொண்டு, அவளைக் கைப்பிடிப்பிலிருந்து நீக்குவதற்காகப் பாய்ந்தாள்;

பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14

நின்னை எய்திய கணவனை விரும்பிப்பேணும் விருப்பத்தை உடையை ஆக என்று வாழ்த்தி

இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55

இது, பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;

மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8

தன்னுடைய இளம் பெண்மானைத் தழுவிய பெரிய பிடரியைக் கொண்ட ஆண்மான்

மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை
பெண்மை பொதுமை பிணையிலி – பரி 20/49,50

மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!
உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *