Skip to content

சொல் பொருள்

(வி) 1. உதிர், 2. (நீர்)தெறித்துச் சிதறு, (பெ) சிறுதுளிகளாகிய புகைப்படலம், (நீர்த்துளிகளின்) சிதறல்

சொல் பொருள் விளக்கம்

1. உதிர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fall to pieces or powder, splash and scatter, drift as of smoke, dust or minute water particles, scattering (of minute particles)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை – சிறு 24-26

கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் உதிர்ந்துகிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,
அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்;

கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/8,9

கரையில் நிற்போர் வியப்ப, திரையிடத்துத் திவலை தெறித்துச் சிதற
ஆழமான நீரையுடைய மடுவின்கண் ’துடும்’ என்று ஒலிப்பக் குதித்து

கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/1-3

கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
அலைகள் தம்மில் மோதி உடைதலால் எழும் நீர்த்துளிப் புகைப்படலம் போல மலைமுகடுகளில் மகிழ்ந்து ஏறி
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *