Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குறைதீர்க்க வேண்டுதல், 2. பின்னடைவு, பின்தங்கல்

சொல் பொருள் விளக்கம்

1. குறைதீர்க்க வேண்டுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

seeking a redress, lagging behind

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே – நற் 140/7-9

பந்தோடு ஓடியாடும் நம்மீது பரிவில்லாத தலைவி
நம்மீது இரக்கங்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், பெரிதும் துவண்டுபோய்
இரந்து அவள் பின் நிற்றலை வெறுக்காதே! பெரிய நெஞ்சே!

நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/4-6

உனது தேர்
முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி – அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *