Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குறுணி வீதம் கொள்கலங்களில் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள், 2. குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம்,

சொல் பொருள் விளக்கம்

1. குறுணி வீதம் கொள்கலங்களில் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruNi

A vessel of the capacity of a kuruNi

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை – அகம் 242/8-12

என் மகளது துயர் வந்த காரணத்தை
அறிதல் வேண்டும் என்று பல குறுணி நிவேதனப்பொருள்களைப் பலியாக வைத்து
வெறியாடும் பெரிய களம் பொலிவுறுமாறு துதித்து
ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிடா முன்னரே

மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1

ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையைக் குறுணியளவு படைத்தும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *