சொல் பொருள்
(வி) 1. ஒளிர், சுடர்விடு, பிரகாசி, 2. உயர், 3. பெருகு, வழிந்தோடு, 4. பெருத்திரு, மிகுதியாயிரு, 5. செறிவாயிரு, 6. சிறந்திரு,
சொல் பொருள் விளக்கம்
1. ஒளிர், சுடர்விடு, பிரகாசி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, glitter, glisten, be high, lofty, overflow, be plenty, be dense, be great, eminent, exalted
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் தெரி மணி பிறங்கும் பூணினை – பரி 1/8,9 திருமகள் நிறைந்து உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில் தெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்! பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285 உயரமான நிலைகளையுடைய மாடங்கள் அமைந்த உறையூரை விரிவுரச்செய்து பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90 மிகுகின்ற வெள்ளிய அருவிநீர் வீழும் பக்கத்தினையுடைய மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111 எருமை கிடந்தாற்போன்ற கல் பெருத்த வழியிடத்திலே மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/12 மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில் அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/3,4 அறநூல்களை ஓதிப் பயின்று விளங்கிய நாவினையும், உயர்ந்த புகழமைந்த வேள்விகள் பல செய்துமுடித்தற்கேதுவாகிய கேள்வியினையுமுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்