சொல் பொருள்
பிள்ளை – ஆண் பிள்ளை
குட்டி – பெண் பிள்ளை
சொல் பொருள் விளக்கம்
“ உங்களுக்குப் பிள்ளை குட்டி எத்தனை?” என உற்றார் உறவினர் கேட்பது வழக்காறு. இவற்றுள் குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறிக்கும். குட்டி குறுமான், குழந்தை குட்டி என்பவற்றைக் காண்க. பிள்ளை என்பது பொதுப் பெயர் ஆயினும் இவண், ஆண்பிள்ளையைக் குறித்து நின்றதாம். அது குழந்தை என்பது போன்றதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்