சொல் பொருள்
(வி) கையால் முறுக்கி/இறுக்கி நீர்/சாறு/பால் வெளியேறச் செய்,
(பெ) கள்
சொல் பொருள் விளக்கம்
கையால் முறுக்கி/இறுக்கி நீர்/சாறு/பால் வெளியேறச் செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
squeeze, express, press out with the hands; toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி நளி படு சிலம்பில் பாயம் பாடி பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம் பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 57-60 பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது, அடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி, தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம் பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி, தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியா குறுகி வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் – நற் 57/1-6 வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக, அது தூங்கும் நேரத்தில், பஞ்சுபோன்ற தலையையுடைய குரங்கு கல்லென ஒலிக்கும் தன் சுற்றத்தைக் கையமர்த்தி, கிட்டே சென்று பருத்த பால்மடியை அமுக்கிப் பற்றி இழுத்து, இனிய பாலை தன் இளைய வலிய குட்டியின் கை நிறையப் பிழிந்துகொடுக்கும் கரும்பின் விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு – அகம் 237/11,12 கரும்பின் முற்றிய தண்டினைப் பிழிந்த அழகிய இனிய சாறு அட்ட பாகுடன் களிறு மென்றிட்ட கவளம் போல நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/3,4 யானை மென்று துப்பிய கவளத்தின் சக்கை போல மதுவைப் பிழிந்து போட்ட சக்கையாகிய சிதறியவற்றினின்றும் வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 280-282 கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்), வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை, பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்