சொல் பொருள்
பீடு – பெருமிதமான செய்கை
பெயர் – பெருமிதச் செய்கை செய்தான் பெயர்
சொல் பொருள் விளக்கம்
பீடும் பெயரும் எழுதி வழி தோறும் நாட்டப்பட்டிருந்த கற்களைச் சுட்டுகிறது சங்கப் பாட்டு. போர்க்களத்தில் பெருமிதம் காட்டுதலையே பீடாகக் கருதி அவர்க்குக் கல்லெடுத்து அவர் பெருமைச் செயலையும் பெயரையும் எழுதி வைத்து வழிபாடு செய்தல் வழக்கம். ‘அமரில்’ இறந்தார் அமரர் எனப்பட்டார். அவரே தெய்வம் எனவும்பட்டார்.
‘பீடு பெற நில்’ என்பது அறவுரை. பிறர்க்குத் தாழாப் பெருநிலை பீடு என்பதாம். பெயர் என்பதே பேராகிப் புகழும் ஆயிற்றாம். பெயர் பெறுவதினும் பீடு பெறுவது தனிச் சிறப்பினதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்