1. சொல் பொருள் விளக்கம்
(பெ) பார்க்க : பீர்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
sponge-gourd, Luffa aegyptiaca
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 13,14 மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து - புகார்:7/169 பாரம் பீரம் பைம் குருக்கத்தி - குறி 92 தாறு படு பீரம் ஊதி வேறுபட - நற் 277/7 இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் - ஐங் 464/2 நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என - நற் 326/6 மாரி பீரத்து அலர் சில கொண்டே - குறு 98/5 பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே - ஐங் 452/5 அரி நுண் பசலை பாஅய் பீரத்து/எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே - அகம் 45/7,8 புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ பொன் போன்ற (நிறமுள்ள)பீர்க்குடன் புதர்கள்தோறும் மலர,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்