Skip to content
பீர்

பீர் என்பது பீர்க்கங்கொடி

1. சொல் பொருள்

(பெ) பீர்க்கங்கொடி

2. சொல் பொருள் விளக்கம்

பீர்க்கங்கொடி காய்கறிக்காக பயிரிடப்படும் ஒரு தாவரம். பீர்க்கம்பூவானது சிறியது; பொன்போன்ற மஞ்சள் நிறமானது. அழகானது: எனினும் மனமில்லாதது. முற்றிய காயில் உள்ள நார் உருண்டையானது குளிக்கும்போது அழுக்கு தேய்க்கும் குளியல் நார் தயாரிக்க பயன்படுகிறது

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

sponge-gourd, Luffa aegyptiaca

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பீர்
பீர்
பீர் என் கிளவி அம்மொடும் சிவணும் - எழுத். புள்.மயங்:70/1

பீர் என் கிளவியொடு ஓர்_இயற்று ஆகும் - எழுத். புள்.மயங்:91/2

ஆரும் வெதிரும் சாரும் பீரும் - எழுத். புள்.மயங்:68/1

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/1,2

தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின; நெற்றியும்
பற்றியேறும் பீர்க்கங்கொடியின் மலரைப் போன்று பசலை படர்வதாயிற்று
பீர்
பீர்
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே - நற் 197/2

பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் - பதி 15/10

பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி - பதி 26/10

பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் - கலி 31/4

பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால் - கலி 53/15

பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால் - கலி 124/8

பீர் அலர் போல பெரிய பசந்தன - கலி 143/49

பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர்/வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ - அகம் 57/12,13


பீர்
பீர்
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் - அகம் 167/10

முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து - அகம் 373/1

பீர் நீர்மை கொண்டன தோள் - ஐந்50:2/4

பீர் இவர் கூரை மறு மனை சேர்ந்து அல்கி - ஐந்70:34/1

பீர் தோன்றி நீர் தோன்றும் கண் - திணை150:100/4

பெரும் பீர் பசப்பித்தீர் பேர்ந்து - திணை150:116/4

பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி - திணை150:118/2

புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப - அகம் 135/2
பீர்க்கங்கொடி
பீர்க்கங்கொடி
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை - தேவா-சம்:521/1

முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே - தேவா-சுந்:376/4
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் - நாலாயி:2950/3

தேர் செல செல்லும் வீதி பீர் செல செல்லும் அன்றே - சிந்தா:2 469/4

பீர் தங்கி பெய்யா மலரின் பிறிது ஆயினாளே - சிந்தா:8 1960/4

பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் - முத்தொள்:28/3

பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ - தேம்பா:29 79/4

பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் - சுந்:6 55/2
பீர்க்கங்கொடி
பீர்க்கங்கொடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *