சொல் பொருள்
பீற்றுதல் – தற்பெருமை பேசல்
சொல் பொருள் விளக்கம்
பீறுதல் என்பது கிழிதல், பீச்சுதல் என்னும் பொருளது. கிழித்துக் கொண்டு பீச்சுதல் பழுத்துப்போன புண்ணில் இருந்து வெளிப்படும். அதுபோல் வெளிப்படும் சொல்லே பீற்றுதல் என்பதாம். ஒருவர் தம் மனத்துள் தம்மைப் பற்றித் தாம் பெருமையாகக் கொண்டுள்ளவற்றைப் பேச்சுக்குப் பேச்சு விடாமல் பேசிக் கேட்பவர் வெறுக்கச் செய்வர். அதனையும் காணும் போதெல்லாம் விடாமல் கூறுவர். அதனால் “உன் பீற்றுதல் தெரியும்; அது என்ன கேளாததா? எங்களுக்குக் கேட்டுக் கேட்டுப் புளிக்கிறது; உனக்கு புளிக்கவே புளிக்காதா?” என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்