சொல் பொருள்

(பெ) 1. புகுவதற்குரிய இல்லம், 2. புகலிடம்

சொல் பொருள் விளக்கம்

1. புகுவதற்குரிய இல்லம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

places one can reside

place of refuge, asylum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா
நின்றாய் நின் புக்கில் பல – கலி 90/24,25

இது ஒன்றும் பழைய காலம் அல்ல, நீ உரைக்கும் பொய்ச்சூள் உனக்குப் பயன்படுவதற்கு, ஏடா!
இங்கு நில்லாதே! உனக்குப் போவதற்குப் பல வீடுகள் உள்ளனவே!”

துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6

குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிடம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.