சொல் பொருள்
(பெ) புதியவன்/ள்
சொல் பொருள் விளக்கம்
புதியவன்/ள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a stranger (second person singular)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/22-25 அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி மணம் பேசி முடிக்க வேண்டும், அப்போது புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின் திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்