சொல் பொருள்
(பெ) 1. நீர், 2. நீர்ப்பெருக்கு, ஆறு
சொல் பொருள் விளக்கம்
1. நீர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
water, flood, river, stream
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீது நீங்க கடல் ஆடியும் மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100 தீவினை போகக் கடலாடியும், (பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும், மழை கொள குறையாது புனல் புக மிகாது – மது 424 முகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்