சொல் பொருள்
(பெ) அற்பம், இழிவு, கீழ்த்தரம்
சொல் பொருள் விளக்கம்
அற்பம், இழிவு, கீழ்த்தரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
meanness, lowness, vileness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/3-6 பிரிவு என்பது அரிதாகிய துய்த்து அமையாத காமத்தோடே பிரிவு ஏற்பட்டவுடனேயே உயிர் போவதாக; இல்லறக் கடமைகளை அறிந்து இருவராய் வாழும் இவ்வுலகில் ஒருவராய் வாழும் சிறுமையினின்றும் தப்புவதற்காக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்