Skip to content

சொல் பொருள்

(வி) 1. பாதுகா, பேணு, 2. போற்று, புகழ், 3. ஒளிர், பொலிவுபெறு

சொல் பொருள் விளக்கம்

1. பாதுகா, பேணு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

protect, take care of, look after, extol, adore, become shiny

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/21-23

மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.

பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை – குறு 126/3

மழையால் வாழ்விக்கப்பட்ட பூங்கொடியையுடைய முல்லையின்

இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7

அவர்களை நன்கு உபசரித்து, அவர்க்கு இனிய கள்ளினை மிகுதியாகக் கொடுப்பதால் 

எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின் – பதி 53/15,16

கணைய மரம் காக்கின்ற, இரும்பு ஆணிகள் தைத்த பலகைகளால் ஆன
பற்பல நிலைகளையுடைய சிறிய நுழைவாயில்களையுடைய கதவுகளின் உருவத்தைக் கண்டாலே,

பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்
அடி புறந்தருகுவர் அடங்காதோரே – புறம் 35/32-34

ஏர் மாடுகளைப் பாதுகாப்போருடைய குடியைப் பாதுகாத்து
ஏனைக் குடிமக்கலையும் பாதுகாப்பாயாயின்
நின் அடியைப் போற்றுவர் நின் பகைவர்

பொடி அழல் புறந்தந்த செய்வு_உறு கிண்கிணி – கலி 85/2

பொன் தூளால் பொடிவைத்து பொலிவுற அழகாகச் செய்த சதங்கை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *