Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காடு, 2. சிறுகாடு, 3. முல்லைநிலம், 4. புறா

சொல் பொருள் விளக்கம்

1. காடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

forest, jungle, forest tract, dove, pigeon

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 24,25

காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி

காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/20,21

காடுகள் கடவுள் விரும்பும் இடம் ஆக, முல்லைநிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,

நின் நுதல் நாறும் நறும் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல – ஐங் 413/1,2

உன்னுடைய நெற்றியைப் போலவே மணங்கமழும் நறிய குளிர்ந்த முல்லைவெளியில்
உன்னைப் போலவே மயில்கள் களித்தாட,

மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *