Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வயல், விளைநிலம், 2. நிலம், 3. இடம், 4. திக்கு, திசை, 5. பொறி, 6. அறிவு

சொல் பொருள் விளக்கம்

1. வயல், விளைநிலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

arable land, rice field, land, Place, location, region, tract of country, direction, quarter, sense organs, knowledge

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/7-11

வேந்தன் அறிவால் மெல்லியனாகி, நாள்தோறும்
தரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி
அன்புகெடக் கொள்ளும் பொருள் தொகுதியை விரும்பின்
யானை புகுந்த விளைவயல் போல,
தானும் உண்ணப்பெறான் உலகமும் கெடும்

பெய்த புலத்து பூத்த முல்லை
பசு முகை தாது நாறும் நறு நுதல் – குறு 323/4,5

மழை பெய்த நிலத்தில் பூத்த முல்லையின்
பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய

யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 149,150

ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,
(அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே

வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல்
பள்ளம் வாடிய பயன் இல் காலை – புறம் 388/1,2

வெள்ளியாகிய மீன் தென் திசையில் நிற்க, விளைவயல்களும்
நீர்நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய

பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை
துற்றவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி – பரி 20/50,51

உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே! ஐம்புல இன்பத்தை மட்டும்
நுகரும் இயல்புடைய காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு உதடுகளையுடைய வாயைத் தொட்டியாக உடையவளே!

புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும் – பரி 23/38

அறிவோடு கூடிய புகழை அணிகலனாகக் கொண்டோரும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *