சொல் பொருள்
வி.எ பொலிவிழந்த, புன்மையுடைய
வி பொலிவிழந்த, புன்மையுடைய
சொல் பொருள் விளக்கம்
பொலிவிழந்த, புன்மையுடைய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் – நற் 38/5,6 நம் நெய்தல் நிலத் தலைவன் பிரிந்துசென்றால், பொலிவிழந்து வெறிச்சோடிப்போய்விடுகிறதே, தோழி! நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி நம் மனை மட_மகள் இன்ன மென்மை சாயலள் அளியள் என்னாய் வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே – குறு 327/4-7 உனது செயல் கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே! நம் மனையிலுள்ள இளையமகள் இன்னவாறான மெல்லிய சாயலுடையவள், இரங்கத்தக்கவள் என்று பாராமல் வாழைமரங்களைப் பெயர்த்துக் கொணர்கிறாய், மலைச்சரிவுகள் பொலிவற்றுப்போக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்