Skip to content

சொல் பொருள்

(பெ.அ) பொலிவிழந்த, புன்மையுடைய

சொல் பொருள் விளக்கம்

பொலிவிழந்த, புன்மையுடைய

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

having no splendour, lackluster

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திறவா கண்ண சாய் செவி குருளை
கறவா பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 130-132

திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,
கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்

பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் – கலி 3/4

தாங்க முடியாத காம நோயோடு பொலிவிழந்த நெற்றியைக் கொண்ட இவள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *