சொல் பொருள்
(பெ) கலைமான்,
சொல் பொருள் விளக்கம்
கலைமான்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
antelope, deer, Antilope cervicapra
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விசைத்த வில்லர் வேட்டம்போகி முல்லை படப்பை புல்வாய் கெண்டும் காமர் புறவினதுவே – அகம் 284/9-11 வேகமாக இழுத்து நாண் பூட்டிய வில்லினராய் வேட்டையாடி முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும் அழகிய காட்டின்கண்ணது புல புல்வாய் கலை பச்சை – புறம் 166/11 காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல் கானம் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய – புறம் 374/1-3 காட்டின்கண் மேய்ந்துவிட்டு அகன்ற கொல்லைக்கண் தங்கும் புல்வாய் என்னும் மானினது ஆணின் நெற்றி மயிர் போல பொற்றாமரை விளங்கும் சென்னியிலுள்ள சிதறிக்கிடக்கும் தலைமயிர் அடங்கிப்படியுமாறு. புல்வாய் என்பது blackbuck என்று சொல்லப்படும் மான் இனம்.. இது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன. இம்மான்கள் அகன்ற சமதரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்