Skip to content

புல் பூண்டு

சொல் பொருள்

புல் – நிலத்தைப் புல்லிக் கிடப்பவை(தழுவிக் கிடப்பவை) புல்லாம்.
பூண்டு – புல்லினும் உயர்ந்து நிற்பது.

சொல் பொருள் விளக்கம்

முன்னது தாளால் பயனாவது, பின்னது கிழங்கால் பயனாவது. ‘புல்லாகிப் பூடாகி’ என்பது திருவாசகம். பூடு-பூண்டு. கூண்டு – கூடு ஆவது போல ஆயது.

தென்னை பனை உயர்ந்து ஓங்கியவை எனினும் ‘புல்லினம்’ எனப்பட்டது. புல்லின் தன்மையாய உட்டுளை யுடைமையால் என்க. புல்-புள்-பொள்-பொள்ளல்-பொய் – பொத்தல் என்பன வெல்லாம் உள்ளீடு இன்மைப் பொருளனவே. பூடும் பூண்டும் வெள்ளைப் பூடு வெள்ளைப் பூண்டு என்பவற்றால் அறிக.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *