சொல் பொருள்
புளிப்பு – காடியாகிப் போதல்
சளிப்பு – காடியும் முதிர்ந்து சுவையழிந்து போதல்.
சொல் பொருள் விளக்கம்
சோற்று நீர் புளிப்புடையதாக இருக்கும். அது நீர் உணவாகப் பயன்படும். ‘நீற்றுத் தண்ணீர்’ எனவும் பெயர் பெறும். புளித்த தண்ணீர் என்பதும் அதன் பெயர். கடுவெயிலுக்கு இயல்பான உடல் நலமான குடிநீர் அது. ஆனால் அது பலநாள் கிடந்து புளிப்பேறிப் போனால் குடிக்க ஆகாதவாறு கெட்டுப்போகும். அதனைச் சளிப்பாதல் என்பர். காடிக் கஞ்சியானாலும் மூடிக்குடி என்பது பழமொழி. சிலர் பேச்சைப் புளித்து சளித்து விட்டதாக வெறுத்துக் கூறுதல் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்