Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பறவை, 2. வண்டு, 3. குருகு, வளை 4. கிட்டிப்புள், 5. நல்நிமித்தம், 6. கள், மதுவுண்ணல்,

சொல் பொருள் விளக்கம்

1. பறவை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bird, bee, bracelet, Trap, small stick used in the game of tip-cat, good omen, toddy, drinking

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முடி வலை முகந்த முடங்கு இறா பாவை
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே – நற் 49/3,4

முடிச்சிட்ட வலைகள் முகந்த முடங்கிய இறாமீன்கள் காய்வதை அவற்றின் மேல் விழும் பறவைகளை விரட்டுவதால் பகலும் கழிந்தது;

முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி 188-190

(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின் (நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை

நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 9,10

(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும், வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும்,

புள் கை போகிய புன் தலை மகாரோடு – மலை 253

கிட்டிப்புள் கையைவிட்டுப் போன புல்லிய தலையையுடைய மக்களாகிய சிறுவருடனே

வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் – குறு 140/1-3

பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது வழிச்செல்வோருக்கு நல் நிமித்தமாக ஒலியெழுப்பத் தங்கியிருக்கும் பாலை நிலத்தில் சென்றனர் காதலர்;

புள்ளே புனலே புலவி இ மூன்றினும்
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/39,40

கள்ளுண்டதாலும், நீராடியதாலும், கணவருடன் ஊடியதாலும் ஆகிய மூன்று காரணங்களினால் மகளிரின் ஒளிமிக்க மையுண்ட கண்களாகிய கெண்டைமீன்கள் தம் சிவந்த ஒளி மேலும் சிவந்து நிற்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *