சொல் பொருள்
பூச்சி – பாம்பு
பொட்டை – தேள்
சொல் பொருள் விளக்கம்
“இப்படிக் குப்பை கூளமாகக் கிடந்தால் பூச்சி பொட்டை அடையாமல் இருக்குமா?”என்று கண்டித்துத் துப்புரவு செய்வார் உண்டு. பாம்பின் மேல் இருக்கும் அச்சத்தால் பாம்பு என்று கூறவும் விரும்பாமல் பூச்சி என்பது வழக்கு. பூச்சிக்கடி எனப் பாம்புக் கடியைக் கூறுவர்.
பொட்டு என்று கொட்டும் கொடுக்கு உடையதைப் பொட்டை என்று கூறுவர். பூரான், நட்டுவாய்க்காலி முதலியவை கடிப்பன. குளவி, தேள் முதலியன கொட்டுவன. பாம்பு தீண்டுவது; தீண்டுவதும் கொட்டுவது போன்றதே. ஆனால் பாம்பின் அச்சத்தால் தொடுதல் பொருளில் தீண்டுதலைச் சுட்டினர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்