Skip to content

பூசி மெழுகுதல்

சொல் பொருள்

பூசுதல் – தடவுதல்
மெழுகுதல் – தேய்த்தல்

சொல் பொருள் விளக்கம்

ஈயம் பூசுதல்; சுவர்ப் பூச்சு; இவற்றால் பூசுதல் புலனாம். முற்படப் பூசி, பின்னே அதனை மெழுகுதல் நிகழும் பூனைக்குப் பூசை என்பதொரு பெயர். அது தன் வாயை அடிக்கடி பூசுதலால் பெற்ற பெயர். பூசுகர், பூசனை என்பனவும் பூசுதலால் வந்தவையே.

மெழுகுதல் சாணகத்தைக் கரைத்துத் தேய்த்தல் மெழுகுதலாம். பூசிய சுவரையோ தளத்தையோ மெழுக்கிடல் கண்கூடு. ஒன்றை, உண்மை மறைத்து மழுப்பிச் சொல்லுதலைப் பூசி மெழுகுவதாகக் கூறுவது வழக்கம். பூசி மெழுகும் வினையடியாக வந்த மரபு இதுவாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *