Skip to content

சொல் பொருள்

(பெ) பூழி நாட்டைச் சேர்ந்தவர்,

சொல் பொருள் விளக்கம்

பூழி நாட்டைச் சேர்ந்தவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the people of a country called puzhi

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மரம் பயில் சோலை மலிய பூழியர்
உருவ துருவின் நாள் மேயல் ஆரும் – நற் 192/3,4

மரங்களடர்ந்த சோலை நிரம்பப் பூழியரின்
நல்ல நிறங்கொண்ட செம்மறிஆட்டு மந்தையைப் போல அன்றைக்குரிய இரையைத் தேடி உண்ணும்

யார் அணங்கு உற்றனை கடலே பூழியர்
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன – குறு 163/1,2

யாரால் பயந்துபோயிருக்கின்றாய்! கடலே! பூழியரின்
சிறிய தலைகளைக் கொண்ட வெள்ளாட்டுக்கூட்டம் பரவியதைப் போன்று

வேழ வெண் புணை தழீஇ பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு – அகம் 6/8,9

வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,

கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/22,23

கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!

புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/12

பூழியர் கோவே பொலம் தேர் பொறைய – பதி 84/6

எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27

ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/28

பூழிநாடு என்பது மேலைக்கடற்கரைப்பகுதியைச் சேர்ந்த ஒரு நாடு. மலபார் மாவட்டத்தில் பொன்னானி தாலூகாவின் தென் பகுதி இன்றும் பூழி நாடு எனப்படுகிறது. பூழியர் என்பவர் சங்ககால இடையர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர். பூழியர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் மேய்த்துவந்தனர்.நற் 192,குறு 163 அத்துடன் யானைகளைப் பழக்கும் தொழிலையும் செய்துவந்தனர்.அகம் 6 பூழிநாட்டுச் செருப்புமலைப் பாதையில் வயிரக்கற்கள் கிடைக்கும் பதி 21/23 பல்யானைச் செல்கெழு குட்டுவன் [பதி 21], களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [பதி-பதிகம் 4] செல்வக் கடுங்கோ வாழியாதன் [புறம் 387/28] பெருஞ்சேரல் இரும்பொறை [பதி-73/13], இளஞ்சேரல் இரும்பொறை [பதி-84,90] ஆகியோர் பூழிநாட்டைக் கைப்பற்றி ஆண்ட சேரமன்னர்கள் எனத் தெரியவருகின்றனர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *