சொல் பொருள்
(பெ) 1. புழுதி, 2. பொடி, துகள்
சொல் பொருள் விளக்கம்
1. புழுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dust, powder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/4,5 கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை, விசையம் கொழித்த பூழி அன்ன உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 444,445 சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல, (திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் (பெறுவீர்);
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்