சொல் பொருள்
(பெ) பேணும் முன்னர், விரும்பும் முன்னர்
சொல் பொருள் விளக்கம்
பேணும் முன்னர், விரும்பும் முன்னர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
before I asked for it
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் ஒன்று யான் பெட்டாஅளவையின் ஒன்றிய – பொரு 70-73 கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் (தோற்றுவித்த) இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே, ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே ஒன்று யான் பெட்டாஅளவை அன்றே ஆன்றுவிட்டனன் – புறம் 399/29,30 ஒன்றை நான் விரும்பிக்கேளா முன்பே அப்பொழுதே கொடுத்தற்கு அமைந்து என்பால்வரவிடுவானாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்