சொல் பொருள்
(பெ) இருவாட்சிப்பூ
சொல் பொருள் விளக்கம்
இருவாட்சிப்பூ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரும்பு ஆர் சோலை பெரும் பெயர் கொல்லி பெருவாய்மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதி 81/24,25 வண்டுகள் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த பெரும் புகழையுடைய கொல்லி மலையில் உண்டாகிய இருவாட்சிப் பூக்களோடு, பச்சிலையைத் தொடுத்து அணிந்து, இருவாட்சிப்பூவை இருள்வாசி என்றும் சொல்வர். நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94 என்று குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் நள்ளிருள்நாறி இதுதான் என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்