சொல் பொருள்
(பெ) மிகுந்த வலிமை
சொல் பொருள் விளக்கம்
மிகுந்த வலிமை
அன்மொழித்தொகையாக, மிகுந்த வலிமையுள்ளவரைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
person with great strength or power
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12 மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க, வந்தது தலைவனது தேர், அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்றும் இலனே – புறம் 313/1,2 வழிகள் பல பொருந்திய நாட்டையுடையவனாகிய பெரிய வலிமை மிக்க தலைவன் கையிலே பொருள் யாதும் உடையன் அல்லன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்