சொல் பொருள்
(பெ) 1. பெரிய ஆறு, பேராறு,
2. சேரநாட்டிலுள்ள பெரியாறு எனப்படும் ஆறு,
சொல் பொருள் விளக்கம்
1. பெரிய ஆறு, பேராறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a mighty river
the river Periyar in kerala.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/16 கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/9,10 சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க – அகம் 149/8 கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696 மாற்றரும் தெய்வத்து கூட்டம் முன்னிய புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/24-26 மாற்றுதற்கரிய தெய்வமாகிய கொற்றவை கூடியிருக்கும் மலையாகிய அயிரையிடத்தே தோன்றிய நீர் நிறைந்த பெரிய ஆறானது இறங்கி வந்தாற் போன்ற நின்னை நோக்கி வரும் இரவலர்க்கு வரையாது வழங்கும் செழுமையாய்ப் பலவாகிய பொருள்கள் நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று சீர் உடை வியன் புலம் – பதி 28/10,11 கரையளவும் உயர்ந்து நீர் பெருகி வழிந்து இழியும் அகன்ற இடத்தையுடைய பேரியாறு பாயும் சிறப்புப்பொருந்திய அகன்ற புலத்தில் மேலே குறிக்கப்பட்டுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் அடிகள் இந்தப் பேரியாற்றின் பெயரையோ, இடத்தையோ குறிப்பிடவில்லை. இப்பாடல் சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கோதமனார் பாடியது. எனவே, இது இன்றைய கேரளத்தில் உள்ள பெரியாறு என அழைக்கப்படும் ஆறாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்