சொல் பொருள்
பேர் – வாழ்ந்து கொண்டிருக்கும் போது உண்டாகும் பெருமை.
புகழ் – வாழ்வின் பின்னரும் நிலைபெற்றிருக்கும் பெருமை.
சொல் பொருள் விளக்கம்
பெயர் என்பதில் இருந்து வந்தது பேர். பீடும் பெயரும் காண்க. புகழ் “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”என்பது புறப்பாடல்.
பேர் என்பது செல்வாக்கு; புகழ் என்பது வரலாறும் காவியமும். காலத்தோடு முடிவது பேர். என்றும் நிலைப்பது புகழ்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்