Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. பெரிய, 2. பிளந்த

சொல் பொருள் விளக்கம்

பெரிய,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

large, split, cleft

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
——————— ————————— ——————–
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47 – 51

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
———————————– —————————————————-
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1

அழகிய வரிகளையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்

பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன – நற் 347/6

அகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16

பெரிய கையினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண் கரடி

பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1

சருச்சரை பொருந்திய வயிற்றினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண்சங்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *