சொல் பொருள்
(பெ) 1. ஈரம், ஈரப்பசை, 2. பசுமை
சொல் பொருள் விளக்கம்
ஈரம், ஈரப்பசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
moisture, dampness, greenness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் – பெரும் 230,231 ஈரப்பசை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின் உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர், பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/1,2 பலவிதமான வளங்களை விளைந்துகொடுத்து வாழச்செய்யும் பயன் நிறைந்த நிலங்களின் பசுமை அற்றுப்போக, கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்