சொல் பொருள்
(பெ.அ) 1. வருந்திய, 2. ஒளிமங்கிய, பொலிவிழந்த,
சொல் பொருள் விளக்கம்
வருந்திய,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sad, lacking lustre
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14 ஏ மாலையே! ‘தை’யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக் வருந்துகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்! அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று நன் நுதல் நீத்த திலகத்தள் – கலி 143/1-3 அகன்ற ஊரில் முன்பெல்லாம் இருள் நீங்கப்பெற்று அழகிய நிலா திகழ்வதுபோல் அழகுபெற்றிருந்தவள், இப்போது பகற்காலத்தில் ஒளியிழந்த திங்களைப் போல், ஒளி இழந்த நல்ல நெற்றியில் திலகம் இல்லாதவளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்