சொல் பொருள்
பொட்டு – பயறு தானியம் முதலியவற்றின் தோல்.
பொடி – பயறு தானியம் முதலியவற்றின் தோல் நொறுங்கல்.
சொல் பொருள் விளக்கம்
சில பயற்றுக் செடிகளின் காய்ந்த இலையும் பொட்டெனக் கூறப்படும். அவ்விலையின் நொறுங்கல் பொடியாம். துவரம் பொட்டு என்பது துவரை இலையும் நெற்றின் தோலுமாம். அவற்றின் நொறுங்கல் பொடியாம். இனிப் ‘பொட்டுப் பொடி’ எனத் தட்டு முட்டுக் கலங்களும், அணிகலங்களும் வழங்கப் பெறுதல் மிகச் சிறிய, பெரிய பொருள்களைக் குறிப்பதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்