Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பொது அரங்கு, அம்பலம், 2. பொதிகை மலை

சொல் பொருள் விளக்கம்

பொது அரங்கு, அம்பலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

public hall, the hill pothigai

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் – அகம் 287/5

சுரைக்கொடி படர்ந்த அம்பலத்தின்கண்ணே அழகிய குடியிருப்பினையுடைய சீறூரிலுள்ளோர்

பொதியில் முனிவன் புரை வரை கீறி
மிதுனம் அடைய – பரி 11/11,12

பொதிகை முனிவனின் பெயர்கொண்ட அகத்தியன் என்னும் மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து
மிதுன ராசியைச் சேர,

திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/7,8

திருந்திய இலையைக்கொண்ட நெடிய வேலையுடைய பாண்டியனது பொதிகை மலையில்
அடைதற்கரிய உச்சியினின்றும் இழியும் ஆரவாரித்து வருதலையுடைய அருவி ஒலிபோல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *