சொல் பொருள்

(வி) 1. தழை, செழி, 2. நிறை, 3. நெருங்கு, நெருக்கமாக இரு,

சொல் பொருள் விளக்கம்

தழை, செழி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be luxuriant; prosper, thrive, flourish, be possessed of, filled; be thick, close or crowded

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10

இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்

நுண் முள் வேலி தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி – நற் 277/6,7

நுண்மையான முட்களாலாகிய வேலியில் படர்ந்த, தாதுடன் செழித்துத் தழைத்த,
கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து,

முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்
விதை குறு வட்டி போதொடு பொதுள
பொழுதோ தான் வந்தன்றே – குறு 155/1-3

பழமையான தினைப்புனத்தை உழுத ஆரவாரம் மிக்க உழவரின்
விதைகளை வைக்கும் சிறிய வட்டிகள், முல்லை மொட்டுக்களால் நிறைய
கார்ப்பருவம் வந்துவிட்டது;

பொம்மல் ஓதி பொதுள வாரி – அகம் 257/5

பொலிவுற்ற கூந்தலை நெருங்க வாரி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.