சொல் பொருள்
(வி) 1. கெடு, அழி, 2. இற
சொல் பொருள் விளக்கம்
கெடு, அழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perish, be ruined, die
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன் பொதுவர் வழி பொன்ற இருங்கோ_வேள் மருங்கு சாய – பட் 281,282 வளங்குன்றிய முல்லைநில மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக, இருங்கோவேளின் குலம் (முழுதும்)அழிய கரை கவர் கொடும் கழி கண் கவர் புள் இனம் திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/31-33 “கரையை இடித்துக் கவர்ந்துகொள்ளும் வளைவான கழியினில், கண்களைக் கவரும் அழகிய பறவைத் திரள் அலைகள் மோதுவதால் இறந்துபோன புலால் நாறும் மீன்களையன்றி, தமக்கு இரையாக உயிருள்ள மீன்களைக் கொன்று உண்ணாத துறையைச் சேர்ந்தவனை, நாம் பாடும் இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11 இன்றுதான் இரங்கத்தக்க நான் இறந்தொழியும் நாளோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்