சொல் பொருள்
(பெ) 1. மிகுதி, 2. சோற்றுக்குவியல், 3. பொங்குதல், 4. திரள், 5. தோற்றப் பொலிவு
சொல் பொருள் விளக்கம்
மிகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Abundance, copiousness, abundant food, swelling, crowd, fineness of appearance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/4-6 கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன் கையகத்தில் ஏந்தி வாய் கொள்ள உண்டு, பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169 பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன், (மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர் பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/4 பொங்கியெழுந்து முழங்கும் கடல் அலையில் நம்மோடு கடலிற்குளித்து பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3 திரளான அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில், பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11 பொலிவுபெற்ற கூந்தலையுடையவள் பேரவாவினால் நடுங்கி வருந்துமாறு பொம்மல் ஓதி என்ற தொடர் சங்க இலக்கியங்களில் 13 இடங்களில் காணப்படுகிறது. இதற்கு, மிகுதியான, திரளான என்ற பொருள்களும் ஒத்து வருவன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்