சொல் பொருள்
(பெ) 1. பொய்கூறுதல், 2. பொய்படுதல், (சொல்)பிழைத்தல்,
சொல் பொருள் விளக்கம்
பொய்கூறுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
uttering falsehood
failing in (promising) words
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே – பதி 20/8,9 கண்ணுக்கு முன்னால் மகிழ்ச்சியைக் காட்டி, தம் மனம் திறந்து அன்புசெலுத்தாத உட்பகைகொண்டாரின் நாட்டினிலும் பொய்கூறுவதை அறியான், நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/6,7 நிலங்கள் தம் இயல்பினின்றும் மாறுபடும் காலம் என்றாலும் சொன்ன சொல் பொய்படுதலை நீ அறியமாட்டாய்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்