Skip to content

சொல் பொருள்

(வி) 1. போரிடு, 2. முட்டு, எட்டு,  3. தாக்கு, மோது, 4. மாறுபடு, எதிர்த்துநில், 5. உறை, தாக்கிப்பயன்விளை,  6. சந்தி, சேர்,  7. குத்து, 8. தடு, தடைசெய், 9. தேய், உரசு,

2. (பெ) ஒப்பு,

சொல் பொருள் விளக்கம்

போரிடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fight, contend in warfare, engage in battle, reach, extend, come in collision with, dash against, as waves, compete, vie with, affect, meet, join, unite, stab, strike, pound, hinder, reduce by friction, rub away, equality

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415

நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267

விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே,

புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் – அகம் 237/14

நீர் மோதுகின்ற மதகுகளையுடைய உறையூரையே அடைவதாயினும்

பொரு கயல் முரணிய உண்கண் – குறு 250/5

ஒன்றற்கொன்று எதிர்த்துநிற்கும் கயல்களைப் போன்றிருக்கும் மையுண்ட கண்களையும்

பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொர
கண்டிசின் வாழி தோழி – குறு 240/1-5

குளிர்ந்த புதரில் படர்ந்த பச்சைக் கொடியையுடைய அவரையின்
கிளி வாயைப் போன்று ஒளிவிடும் பலவாகிய மலர்கள்
காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக
வாடைக்காற்று வந்ததன் மேலும், காமநோய் என்னைத் தாக்கி வருத்தும்படி
காண்பாயாக! வாழ்க தோழியே!

கண் பொர மற்று அதன்_கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/7,8

இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள, அதனால் அவரை
மீண்டும் என்பால் சேர்த்துக்கொள்வதற்காக மெல்லமெல்ல வரும் மள்ளர்களுக்கான சேரிப்போர்.

கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் – ஐங் 319/1

கண்டோர் கண்ணைக் குத்தும்படி ஒளிவிடும் கதிர்கள் நெருப்பாய்ச்சுடும் பாழ்நிலத்தினையுடையதாய்

பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை
சிறு கண் யானை உறு பகை நினையாது
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே – ஐங் 362

பிணங்களின் மீதான கற்குவியல்களைக் கொண்ட ஒதுங்கிச் செல்வதற்கும் அரிய கிளைத்த வழிகளில்,
சிறிய கண்களைக் கொண்ட யானையினால் ஏற்படும் கெடுதலையும் எண்ணிப்பாராமல்
எவ்வாறு வந்தாய் பூமாலை அணிந்த மார்பினையுடையவனே! –
எமக்கு அருள்செய்யவேண்டும் என்ற நெஞ்சம் தூண்டிவிட,
இருள் தடுத்தற்குச் செறிந்து நின்ற இந்த இரவினில் –

மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை – பதி 90/32,33

சிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத் தொடுமாறு இழுத்து வளைக்கும்போது
வில்லின் நாண் தேய்ப்பதால் ஒளிர்ந்து பிரகாசிக்கும் வலி பொருந்திய பெரிய கையினையும்

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1

ஒப்பற்ற தோழியருடன் அருவியில் நீராடி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *